நூல்கள்›நற்றிணை›பாடல் 1552

பாடல் 1552

கபிலர்

கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை

வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்

கை புனை சிறு நெறி வாங்கி, பையென,

விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,

பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் . . . .

செலவுடன் விடுகோ - தோழி! - பலவுடன்

வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,

துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,

பெருங் களிறு பிளிறும் சோலை அவர்

சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? . . . .

குறிஞ்சி

← பாடல் 1551பாடல் 1553 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்