நூல்கள்›நற்றிணை›பாடல் 1551

பாடல் 1551

இடைக்காடனார்

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை

ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,

பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்

கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,

வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், . . . .

நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,

செல்க - பாக! - நின் செய்வினை நெடுந் தேர்:

விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,

மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,

நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் . . . .

பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,

'வந்தீக, எந்தை!' என்னும்

அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

முல்லை

← பாடல் 1550பாடல் 1552 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்