நூல்கள்›நற்றிணை›பாடல் 1550

பாடல் 1550

குண்டுகட்பாலியாதனார்

சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,

குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,

உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்

மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,

பெரிதும் சான்றோர்மன்ற - விசிபிணி . . . .

முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,

'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர்

தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக்

கயல் ஏர் உண்கண் குறுமகட்கு

அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! . . . .

குறிஞ்சி

← பாடல் 1549பாடல் 1551 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்