நூல்கள்›நற்றிணை›பாடல் 1549

பாடல் 1549

தாயங்கண்ணனார்

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்

பழ நலம் இழந்து பசலை பாய,

இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்

புலவேன் வாழி - தோழி! - சிறு கால்

அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் . . . .

பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்

கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்

முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்

கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்

தானே யானே புணர்ந்தமாறே. . . . .

நெய்தல்

← பாடல் 1548பாடல் 1550 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்