நூல்கள்›நற்றிணை›பாடல் 1548

பாடல் 1548

காவிதிக் கீரங்கண்ணனார்

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;

எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;

வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்

நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;

ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌத்தோர் . . . .

கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய

பராரை வேம்பின் படு சினை இருந்த

குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;

ஆனா நோய் அட வருந்தி, இன்னும்

தமியேன் கேட்குவென் கொல்லோ, . . . .

பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

நெய்தல்

← பாடல் 1547பாடல் 1549 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்