பாடல் 1547
கபிலர்
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் . . . .
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன் - தோழி! - நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.
குறிஞ்சி