நூல்கள்›நற்றிணை›பாடல் 1539

பாடல் 1539

நொச்சி நியமங்கிழார்

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்

தளி பதம் பெற்ற கான் உழு குறவர்

சில வித்து அகல இட்டென, பல விளைந்து,

இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,

மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் . . . .

கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே

படும்கால் பையுள் தீரும்; படாஅது

தவிரும்காலைஆயின், என்

உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!

குறிஞ்சி

← பாடல் 1538பாடல் 1540 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்