பாடல் 1538
நொச்சி நியமங் கிழார்
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி? - சுடர் நுதற் குறுமகள்!
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், . . . .
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, . . . .
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?
பாலை