நூல்கள்›நற்றிணை›பாடல் 1537

பாடல் 1537

ஆசிரியர் அறியப்படவில்லை

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை

முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்

கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,

நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;

குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி . . . .

வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,

இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,

கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்

முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,

வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் . . . .

திரை எழு பௌவம் முன்னிய

கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.

நெய்தல்

← பாடல் 1536பாடல் 1538 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்