நூல்கள்›நற்றிணை›பாடல் 1529

பாடல் 1529

பேரி சாத்தனார்

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை

வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,

நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,

அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,

உளெனே- வாழி, தோழி! வளை நீர்க் . . . .

கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்

வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி,

வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்,

நீல் நிற விசும்பின் மீனொடு புரைய,

பைபய இமைக்கும் துறைவன் . . . .

மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!

நெய்தல்

← பாடல் 1528பாடல் 1530 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்