பாடல் 1525
ஆசிரியர் அறியப்படவில்லை
அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, . . . .
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.
நெய்தல்