நூல்கள்›நற்றிணை›பாடல் 1524

பாடல் 1524

மதுரை மருதன் இளநாகனார்

அம்ம வாழி, தோழி! கைம்மாறு

யாது செய்வாங்கொல் நாமே- கய வாய்க்

கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,

வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,

அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் . . . .

தனி நிலை இதணம் புலம்பப் போகி,

மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,

குன்ற வெற்பனொடு நாம் விளையாட,

இரும்பு கவர்கொண்ட ஏனற்

பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? . . . .

குறிஞ்சி

← பாடல் 1523பாடல் 1525 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்