நூல்கள்›நற்றிணை›பாடல் 1523

பாடல் 1523

ஆசிரியர் அறியப்படவில்லை

அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்

துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,

நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய்,

இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை!

நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; . . . .

பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்

அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக,

யாரும் இல் ஒரு சிறை இருந்து,

பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே!

பாலை

← பாடல் 1522பாடல் 1524 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்