நூல்கள்›நற்றிணை›பாடல் 1513

பாடல் 1513

ஆசிரியர் அறியப்படவில்லை

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,

பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,

நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி,

அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து,

உமணர் போகலும் இன்னாதாகும்- . . . .

மடவை மன்ற- கொண்க!- வயின்தோறு

இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்

நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே;

இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த

வறு நீர் நெய்தல் போல, . . . .

வாழாள் ஆதல் சூழாதோயே.

நெய்தல்

← பாடல் 1512பாடல் 1514 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்