நூல்கள்›நற்றிணை›பாடல் 1507

பாடல் 1507

ஆசிரியர் அறியப்படவில்லை

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப,

மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு

ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்;

குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட,

வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும் . . . .

பீலி சூட்டி மணி அணிபவ்வே;

பண்டினும் நனி பல அளிப்ப; இனியே

வந்தன்று போலும்- தோழி!- நொந்து நொந்து,

எழுது எழில் உண்கண் பாவை

அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. . . . .

பாலை

← பாடல் 1506பாடல் 1508 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்