பாடல் 1506
ஆசிரியர் அறியப்படவில்லை
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள்
காதலள் என்னுமோ?' உரைத்திசின்- தோழி!-
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் . . . .
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ,
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,
அருவி முழவின் பாடொடு ஒராங்கு,
மென்மெல இசைக்கும் சாரல், . . . .
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.
குறிஞ்சி