பாடல் 1501
ஆசிரியர் அறியப்படவில்லை
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன்
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் . . . .
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு,
யாங்கு வல்லுந மற்றே- ஞாங்க
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்,
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, . . . .
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே?
பாலை