நூல்கள்›நற்றிணை›பாடல் 1499

பாடல் 1499

ஆசிரியர் அறியப்படவில்லை

'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!

வருவம்' என்னும் பருவரல் தீர,

படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி-

பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி

மீமிசைக் கலித்த வீ நறு முல்லை . . . .

ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்

வன் கை இடையன் எல்லிப் பரீஇ,

வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை

மறுகுடன் கமழும் மாலை,

சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. . . . .

முல்லை

← பாடல் 1498பாடல் 1500 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்