நூல்கள்›நற்றிணை›பாடல் 1496

பாடல் 1496

ஆசிரியர் அறியப்படவில்லை

பொன்னும் மணியும் போலும், யாழ நின்

நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்;

போதும் பணையும் போலும், யாழ நின்

மாதர் உண்கணும் வனப்பின் தோளும்:

இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் . . . .

அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை,

பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்;

வினையும் வேறு புலத்து இலெனே; நினையின்,

யாதனின் பிரிகோ?- மடந்தை!-

காதல் தானும் கடலினும் பெரிதே! . . . .

பாலை

← பாடல் 1495பாடல் 1497 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்