நூல்கள்›நற்றிணை›பாடல் 1494

பாடல் 1494

ஆசிரியர் அறியப்படவில்லை

'உறை துறந்திருந்த புறவில், தனாது

செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக,

உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்

சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச்

சொல்லின் தௌப்பவும், தௌதல் செல்லாய்- . . . .

செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்

வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,

வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ,

உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது

மாறு புறக்கொடுக்கும் அத்தம், . . . .

ஊறு இலராகுதல் உள்ளாமாறே.

பாலை

← பாடல் 1493பாடல் 1495 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்