நூல்கள்›நற்றிணை›பாடல் 1493

பாடல் 1493

ஆசிரியர் அறியப்படவில்லை

உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்-

அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு

எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக்

கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப,

நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, . . . .

இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி

வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல்

நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை,

வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்

கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று . . . .

வைகுறு வனப்பின், தோன்றும்

கைதைஅம் கானல் துறைவன் மாவே!

நெய்தல்

← பாடல் 1492பாடல் 1494 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்