நூல்கள்›நற்றிணை›பாடல் 1492

பாடல் 1492

ஆசிரியர் அறியப்படவில்லை

'மனை உறை புறவின் செங் காற் பேடைக்

காமர் துணையொடு சேவல் சேர,

புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்

தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின்

பனி வார் உண்கண் பைதல கலுழ, . . . .

'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு-

பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்

யாயொடு நனி மிக மடவை!- முனாஅது

வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,

வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், . . . .

துஞ்சு பிடி வருடும் அத்தம்

வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?

பாலை

← பாடல் 1491பாடல் 1493 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்