பாடல் 1490
ஆசிரியர் அறியப்படவில்லை
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென்மன்னே- கம்மென
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், . . . .
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. . . . .
குறிஞ்சி