நூல்கள்›நற்றிணை›பாடல் 1484

பாடல் 1484

நல்லாவூர் கிழார்

கானமும் கம்மென்றன்றே; வானமும்

வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி,

பல் குரல் எழிலி பாடு ஓவாதே;

மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த

வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை . . . .

அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது

துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!-

பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்

நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்

வாரார் ஆயினோ நன்றே; சாரல் . . . .

விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,

நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?

குறிஞ்சி

← பாடல் 1483பாடல் 1485 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்