நூல்கள்›நற்றிணை›பாடல் 1483

பாடல் 1483

தனிமகனார்

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,

மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்

செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும்

தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி

தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, . . . .

நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து,

உண்டல் அளித்து என் உடம்பே- விறல் போர்

வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி,

வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்

பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே. . . . .

பாலை

← பாடல் 1482பாடல் 1484 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்