நூல்கள்›நற்றிணை›பாடல் 1482

பாடல் 1482

ஆலம்பேரி சாத்தனார்

மடலே காமம் தந்தது; அலரே

மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே;

இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர,

புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்;

எல்லாம் தந்ததன்தலையும் பையென . . . .

வடந்தை துவலை தூவ, குடம்பைப்

பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ,

கங்குலும் கையறவு தந்தன்று;

யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே?

நெய்தல்

← பாடல் 1481பாடல் 1483 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்