பாடல் 1480
கடுவன் இளமள்ளனார்
நகை நன்கு உடையன்- பாண!- நும் பெருமகன்:
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் . . . .
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் . . . .
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.
மருதம்