நூல்கள்›நற்றிணை›பாடல் 1476

பாடல் 1476

கந்தரத்தனார்

வில்லாப் பூவின் கண்ணி சூடி,

'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு

நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!-

கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்

பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, . . . .

இருந்தனை சென்மோ- 'வழங்குக சுடர்!' என,

அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்

நல்லேம் என்னும் கிளவி வல்லோன்

எழுதி அன்ன காண் தகு வனப்பின்

ஐயள், மாயோள், அணங்கிய . . . .

மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே!

குறிஞ்சி

← பாடல் 1475பாடல் 1477 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்