நூல்கள்›நற்றிணை›பாடல் 1475

பாடல் 1475

நம்பி குட்டுவன்

இருங் கழி பொருத ஈர வெண் மணல்

மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி

கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்

காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை

ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு . . . .

புணர்ந்தனன் போல உணரக் கூறி,

'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை;

யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம்

பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,

நள்ளென் கங்குலும், வருமரோ- . . . .

அம்ம வாழி!- தோழி அவர் தேர் மணிக் குரலே!

நெய்தல்

← பாடல் 1474பாடல் 1476 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்