பாடல் 1470
பூதங்கண்ணனார்
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி,
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை . . . .
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!- என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும் . . . .
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.
குறிஞ்சி