பாடல் 1469
பெருங்கௌசிகனார்
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை, உரைஇயரோ!- பெருங் கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை! முழவின் . . . .
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்-
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்,
விரவு மலர் உதிர வீசி-
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! . . . .
முல்லை