பாடல் 1467
பெருங்கண்ணனார்
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய- நெஞ்சே!- செவ் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, . . . .
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்,
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! . . . .
பாலை