நூல்கள்›நற்றிணை›பாடல் 1466

பாடல் 1466

நற்றங் கொற்றனார்

திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,

அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,

என்னை- வாழிய, பலவே!- பன்னிய

மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய . . . .

தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,

நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,

தோள் பழி மறைக்கும் உதவிப்

போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே.

குறிஞ்சி

← பாடல் 1465பாடல் 1467 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்