நூல்கள்›நற்றிணை›பாடல் 1465

பாடல் 1465

கதப்பிள்ளையார்

தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை

மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,

வரையாத் தாரம் வரு விருந்து அயரும்

தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்

இனிது மன்றம்ம தானே- பனி படு . . . .

பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,

முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,

வால் உளைப் பொலிந்த, புரவித்

தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

நெய்தல்

← பாடல் 1464பாடல் 1466 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்