பாடல் 1464
ஆசிரியர் அறியப்படவில்லை
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது
இதுகொல்?- வாழி, தோழி!- காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி!
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, . . . .
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர்,
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே! . . . .
குறிஞ்சி