பாடல் 1463
நற்றமனார்
'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;
நுதலும் பசலை பாயின்று- திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று, . . . .
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-
காமுறு தோழி!- காதல்அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தௌத்த
தோய் மடற் சில் நீர் போல, . . . .
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.
குறிஞ்சி