பாடல் 1462
ஆசிரியர் அறியப்படவில்லை
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் . . . .
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்; . . . .
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?
நெய்தல்