நூல்கள்›நற்றிணை›பாடல் 1461

பாடல் 1461

உலோச்சனார்

ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,

உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு

ஊடலும் உடையமோ- உயர் மணற் சேர்ப்ப!

திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்

சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, . . . .

இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,

நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,

கள் கமழ், பொறையாறு அன்ன என்

நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?

நெய்தல்

← பாடல் 1460பாடல் 1462 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்