நூல்கள்›நற்றிணை›பாடல் 1460

பாடல் 1460

நெய்தல்தத்தனார்

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்

மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,

கோலின் எறிந்து காலைத் தோன்றிய

செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்

தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? . . . .

எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;

நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்

வாடிய வரியும் நோக்கி, நீடாது,

'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று

ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் . . . .

வையக வரையளவு இறந்த,

எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.

நெய்தல்

← பாடல் 1459பாடல் 1461 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்