நூல்கள்›நற்றிணை›பாடல் 1459

பாடல் 1459

அவ்வையார்

பெரு நகை கேளாய், தோழி! காதலர்

ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்

பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்

செல்ப என்ப, தாமே; சென்று,

தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை . . . .

வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-

கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,

படு மழை உருமின் உரற்று குரல்

நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.

குறிஞ்சி

← பாடல் 1458பாடல் 1460 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்