நூல்கள்›நற்றிணை›பாடல் 1458

பாடல் 1458

நற்சேந்தனார்

'பகல் எரி சுடரின் மேனி சாயவும்,

பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்

எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்

உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,

அது கண்டிசினால் யானே' என்று, நனி . . . .

அழுதல் ஆன்றிசின்- ஆயிழை!- ஒலி குரல்

ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,

கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்

சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு

அஃதே நினைந்த நெஞ்சமொடு . . . .

இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.

குறிஞ்சி

← பாடல் 1457பாடல் 1459 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்