பாடல் 1457
சீத்தலைச் சாத்தனார்
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ?- பாண!- பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், . . . .
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
'மெல்லம் புலம்பன் அன்றியும்,
செல்வாம்' என்னும், 'கானலானே'.
நெய்தல்