நூல்கள்›நற்றிணை›பாடல் 1454

பாடல் 1454

மோசி கண்ணத்தனார்

ஒன்று இல் காலை அன்றில் போலப்

புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை

யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று-

நீங்கல்; வாழியர்; ஐய!- ஈங்கை

முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், . . . .

நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி

உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்

தெண் நீர்க் குமிழி இழிதரும்

தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

நெய்தல்

← பாடல் 1453பாடல் 1455 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்