நூல்கள்›நற்றிணை›பாடல் 1453

பாடல் 1453

காஞ்சிப் புலவனார்

உரையாய்- வாழி, தோழி!- இருங் கழி

இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி

வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்

பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,

கானல் ஆயமொடு காலைக் குற்ற . . . .

கள் கமழ் அலர தண் நறுங் காவி

அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,

வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி,

புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்

சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் . . . .

சிறு விளையாடலும் அழுங்கி,

நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.

நெய்தல்

← பாடல் 1452பாடல் 1454 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்