நூல்கள்›நற்றிணை›பாடல் 1452

பாடல் 1452

செங்கண்ணனார்

இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத

கருங் கால் செந்தினை கடியுமுண்டென;

கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி

மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின;

'நரை உரும் உரறும் நாம நள் இருள் . . . .

வரையக நாடன் வரூஉம் என்பது

உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என

நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,

அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு

நீயே சூழ்தல் வேண்டும் - . . . .

பூ வேய் கண்ணி!- அது பொருந்துமாறே.

குறிஞ்சி

← பாடல் 1451பாடல் 1453 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்