நூல்கள்›நற்றிணை›பாடல் 1451

பாடல் 1451

ஒரு சிறைப்பெரியனார்

விதையர் கொன்ற முதையல் பூழி,

இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்

கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,

அரலை அம் காட்டு இரலையொடு, வதியும்

புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: . . . .

'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு

பரியல்; வாழ்க, நின் கண்ணி!- காண் வர

விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா

வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற்

கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, . . . .

எல் விருந்து அயரும் மனைவி

மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!

முல்லை

← பாடல் 1450பாடல் 1452 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்