நூல்கள்›நற்றிணை›பாடல் 1444

பாடல் 1444

தொல்கபிலர்

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,

பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்,

மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்

வைகிக் கேட்டுப் பையாந்திசினே;

அளிதோ தானே- தோழி!- அல்கல் . . . .

வந்தோன்மன்ற குன்ற நாடன்;

துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை

பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்;

ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு

பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, . . . .

மையல் மடப் பிடி இனைய,

கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே.

குறிஞ்சி

← பாடல் 1443பாடல் 1445 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்