நூல்கள்›நற்றிணை›பாடல் 1438

பாடல் 1438

ஆசிரியர் அறியப்படவில்லை

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்

துணையின் தீர்ந்த கடுங்கண் யானை

அணையக் கண்ட அம் குடிக் குறவர்,

கணையர், கிணையர், கை புனை கவணர்,

விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! . . . .

பழகிய பகையும் பிரிவு இன்னாதே;

முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை

சுடர் புரை திரு நுதல் பசப்ப,

தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே!

குறிஞ்சி

← பாடல் 1437பாடல் 1439 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்