நூல்கள்›நற்றிணை›பாடல் 1437

பாடல் 1437

ஆசிரியர் அறியப்படவில்லை

உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்ப்

பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்

கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,

செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்

கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், . . . .

புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்

சென்ற காதலர்வழி வழிப்பட்ட

நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,

ஆனாக் கௌவை மலைந்த

யானே, தோழி! நோய்ப்பாலேனே. . . . .

பாலை

← பாடல் 1436பாடல் 1438 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்