நூல்கள்›நற்றிணை›பாடல் 1439

பாடல் 1439

மீளிப் பெரும்பதுமனார்

'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின்

காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,

'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என,

வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி

உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென . . . .

இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,

துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,

உச்சிக் கட்டிய கூழை ஆவின்

நிலை என, ஒருவேன் ஆகி

உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! . . . .

பாலை

← பாடல் 1438பாடல் 1440 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்